வாட்ஸ் ஆப் நிறுவனத்தின் பேமண்ட் சேவையை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளதாக ஃபேஸ்புக் நிறுவனத்தின் சார்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஃபேஸ்புக் நிறுவனம் வாட்ஸ் ஆப்-ல், ”யூபிஐ” சார்ந்து இயங்கும் பணபரிமாற்ற சேவையை வழங்க முயற்சித்து வருகிறது. இதற்கென வாட்ஸ் ஆப் நிறுவனம் உள்நாட்டு நிறுவங்களுடன் தொடர்ந்து பணியாற்ற இருக்கிறது.
தற்சமயம் இச்சேவைக்கான வெளீயீடு, இந்திய அரசு கட்டுப்பாடுகளால் தாமதமாகி வருகிறது. மேலும் இச்சேவையை துவங்குவதற்கான அனுமதியை கோரும் விண்ணப்பத்தை மத்திய ரிசர்வ் வங்கியிடம் சமர்பிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

வாட்ஸ் அப் மற்ற அப்களை விட எளிதில் பிரபலமாகக் காரணம், பயன்படுத்தும் முறை மிக எளிதானது என்பதாலேயே ஆகும். நாம் டாக்குமென்ட் அனுப்ப முன்பு போல மெயிலுக்காக காத்திருக்க தேவையில்லை இதில் தற்போது டாக்குமென்ட் வரை அனைத்தும் அனுப்ப முடியும். பின்னர் வீடியோ ஸ்டேட்டஸ் என புது புது பரிமாற்றத்துடன் வந்த வண்ணமே உள்ளது வாட்ஸ் அப்.
இப்போது புது முயற்சியாக, வாட்ஸ் ஆப்பில் பணம் அனுப்பலாம் என்ற வசதியானது நிச்சயம் நல்ல வரவேற்பைப் பெறும் என்பதில் ஐயம் இல்லை.