Games

இந்திய விமானப்படை வெளியிடவுள்ள IAF மொபைல் கேம்!

இந்திய விமானப்படை புதிய IAF என்ற மொபைல் கேமை அறிமுகம் செய்துள்ளது. 

இந்த புதிய மொபைல் கேம் ஆண்ட்ராய்டு மற்றும் iOS என இரண்டு தளத்திலும் இந்த கேம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கேமின் முக்கிய அவதார் கேரக்டரில் இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் ‘அபிநந்தத் வர்தமன்’ உருவாக்கப்பட்டுள்ளார். 

இந்த IAF மொபைல் கேம் இல் போர் விமானங்கள், குண்டுவீச்சு விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் போன்ற பல விமானங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. கேமின் கிராபிக்ஸ் தரமும் அட்டகாசமாக உள்ளது. பல்வேறு வகையான வான்வழி வாகனங்கள், லெண்டிங் தளங்கள், பைலட்கள் என முழு விமானப்படையை கண்முன் காட்டுகிறது இந்த கேம். 


இந்திய விமானப்படை வெளியிடவுள்ள IAF மொபைல் கேம்!

எதிரிகளின் ப்ரோ விமானங்களைச் சுட்டு வீழ்த்தும் மிஷன், அடுத்தநாட்டு எல்லைக்குள் ஊடுருவி வெளி வரும் மிஷன் போன்று பல விதமான கேமிங் விளையாட்டை இந்த கேமில் இந்திய விமானப்படையினர் உருவாக்கியுள்ளனர். பப்ஜி கேமிற்கு போட்டியாக இந்த IAF கேம் இந்தியாவில் பிரபலம் அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த புதிய IAF மொபைல் கேம் வரும் ஜூலை 31, முதல் கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கும் என்று இந்திய விமானப்படை அறிவித்துள்ளது.

Related posts

ஒரு வருஷத்துக்குள்ள 25 கோடி டவுண்ட்லோடுகளைக் கடந்த கால் ஆஃப் டியூட்டி கேம்!!

TechNews Tamil

இந்தியாவில் தடைசெய்யப்பட உள்ள பப்ஜி மொபைல் கேமிங்க் ஆப்!!

TechNews Tamil

கேம் ஸ்டிரீமிங் சேவையில் கால் பதிக்கத் திட்டமிட்டுள்ள அமேசான்!!

TechNews Tamil