ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய இரண்டு நிறுவனங்களும் வைபை காலிங் சேவையை சமீபத்தில் அறிமுகம் செய்தது.
பிஎஸ்என்எல் விங்ஸ் சேவையின் ஆண்டு வாடகை – ரூ.1,099
தற்போது இந்த 2 நிறுவனங்களுக்கும் போட்டியாக பிஎஸ்என்எல் நிறுவனம் விங்ஸ் என்ற சேவையை அறிமுகம் செய்துள்ளது.
அதாவது இதுவும் வைஃபை காலிங் சேவை போன்ற அம்சங்களைக் கொண்டதாகவே உள்ளது.

ஜியோ மற்றும் ஏர்டெல் இரண்டும் வைபை காலிங்க் சேவையினை அறிமுகப்படுத்தி வரவேற்பினைப் பெற்றுள்ள நிலையில், பிஎஸ்என்எல் இன் விங்க்ஸ் சேவையும் வரவேற்பினைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
அழைப்புகள் செய்யப்படும் முறையானது பிஎஸ்என்எல் விங்ஸ் சேவையில் சிறிது வித்தியாசம் கொண்டதாக உள்ளது.
பிஎஸ்என்எல் விங்ஸ் ஆப் ஐ பதிவிறக்கம் செய்து, லாகின் விபரங்களை உள்ளிடவும், அதாவது லாகின் அக்கௌன்டை பிஎஸ்என்எல் நிறுவனத்திடம் இருந்து பதிவு செய்ய வேண்டும்.
பிஎஸ்என்எல் விங்ஸ் சேவையை பயன்படுத்த ரெஜிஸ்டரேஷன் தேவை என்பதே மற்ற நெட்வொர்க்கில் இருந்து வேறுபட்டது.