ஸ்மார்ட்போன் தயாரிப்பில் உலகளவில் முன்னணி இடத்தில் உள்ள சியோமியின், பெரும்பாலான சிறப்பம்சங்கள் ஐபோனைப் போலவே இருக்கும்.
தற்போது
சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள சியோமி சிசி9 ஸ்மார்ட்போனில் ஒரு வசதி, அப்படியே ஆப்பிள் ஐஓஎஸ் போனில்
இருந்து எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின்
ஐஓஎஸ் 12 ஸ்மார்ட்போனில் ‘மீமோஜி’ என்ற ஆப்ஷன் அறிமுகமானது.

மீமோஜியின் மூலம் நாமே அனிமேஷனில் ஒரு முகத்தை உருவாக்க முடியும். வாட்ஸ்அப்பில் எமோஜி உள்ளது போல், மீமோஜி மூலம் நமக்கு தேவையான முகத்தை, கலரை தேர்வு செய்து கொண்டு தனித்தனியாக அனிமேஷன் எமோஜி உருவாக்கலாம்.
ஆப்பிள் நிறுவனத்தின் இந்த உருவாக்கம், தற்போது அப்படியே சியோமி சிசி9 ஸ்மார்ட்போனில் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆப்பிளில் மீமோஜி என்று பெயரிட்டது போல், சியோமியில் மைமோஜீ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஆப் மூலம் ஒருவரை போட்டோ எடுத்து, அதை அப்படியே அனிமேஷன் எமோஜியாக மாற்ற முடியும்.
சியோமியின் வாடிக்கையாளர்களுக்கு இது புதுமையாக இருப்பதால், வாடிக்கையாளர்கள் இதனை இந்தக் காரணத்திற்காக விரும்பியே வாங்குகின்றனர்.
இதனால் சியோமி மீது ஆப்பிள் வழக்குத் தொடரலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.