இணையதளத்தில்த்தில் நம் வாழ்க்கையின் அனைத்துத் தேவைகளையும் நிறைவேற்ற பல அப்ளிகேசன்கள் வந்துவிட்டன. வீட்டை விட்டு வெளியே செல்லாமலே அனைத்தும் வீடு தேடி வரும் அளவு முன்னேறிவிட்டோம் இந்த அப்ளிகேசன்களால்.
தெரிந்த ஊரில் எங்கே என்ன உள்ளது, எங்கே மலிவு விலைப் பொருட்கள் கிடைக்கும் என்று அனைவருக்கும் தெரியும், தெரியாத ஒரு இடத்தில் போய் கொண்டிருக்கும்போது சாப்பிட வேண்டும் என்றால் கூகுள் மேப்பின் புதிய ஆப்சனைப் பயன்படுத்தலாம்.

இது தற்போது முக்கியமான சில நகரங்களில் மட்டும் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. கூகுள் மேப் அப்ளிகேசனில் நீங்கள் பயணிக்கும் இடத்தை பார்த்து கொள்வது போல, போகும் வழியில் இருக்கும் உணவகங்கள் அங்குள்ள உணவுப்பொருட்களின் விலைப்பட்டியல், சலுகைவிலை ஆகியவற்றை காண்பிக்கும் புதிய ஆப்சனை கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது.
இதுபோலவே சலுகை விலையில் உள்ள விடுதிகள் போன்ற இன்னப்பிற வசதிகளையும் எதிர்காலத்தில் சேர்க்க உள்ளதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த வசதி வெற்றிகரமாக செயல்பட்டால் மேலும் பல ஊர்களிலும் விரிவுப்படுத்தப்படும் என கூகுள் அதிகாரப் பூர்வ அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.