Mobile

அட்டகாசமான விலையில் நேற்று வெளியான ஒப்போ K3

ஒப்போ K3 ஸ்மார்ட்போன் நேற்று இந்தியாவில் வெளியிடப்பட்டது.

சீனாவில் இந்த ஸ்மார்ட்போன் 3 வகைகளில் அறிமுகமானது. 6GB ரேம் + 64GB சேமிப்பு வசதி, 6GB ரேம் + 128GB சேமிப்பு வசதி மற்றும் 8GB ரேம் + 256GB சேமிப்பு வசதி என்ற அளவுகளை கொண்ட இந்த மூன்று வகைகள் 1,599 யுவான்கள் (16,100 ரூபாய்), 1,899 யுவான்கள் (19,100 ரூபாய்) மற்றும் 2,299 யுவான்கள் (23.,100 ரூபாய்) என்ற விலைகளில் விற்பனையாகின. எனவே சீன விலைக்கு ஏற்பவே இங்கும் K3 விற்பனை செய்யப்படும் எனத் தெரிகிறது. 

அட்டகாசமான விலையில் நேற்று வெளியான ஒப்போ K3

இரண்டு நானோ சிம் வசதிகளை கொண்ட இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்ட் 9 பை அமைப்பு கொண்டு செயல்படுகிறது. 6.5-இன்ச் அளவிலான FHD+ திரை (1080×2340 பிக்சல்கள்), 19.5:9 திரை விகிதம் என்ற அம்சங்களையும் கொண்டுள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன், இன்-டிஸ்ப்ளே ஃபிங்கர் ப்ரின்ட் சென்சாரையும் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னேப்ட்ராகன் 710 எஸ் ஓ சி ப்ராசஸர் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 16 மெகாபிக்சல் அளவிலான பாப்-அப் செல்பி கேமராவை கொண்டுள்ளது.

பின்புறத்தில் 16 மெகாபிக்சல் அளவிலான முதன்மை கேமரா, 2 மெகாபிக்சல் அளவிலான டெப்த் சென்சார் கேமரா என இரண்டு கேமராக்களை பெற்றுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 3,765mAh அளவிலான பேட்டரியையும் கொண்டுள்ளது. 

Related posts

விற்பனையைத் துவக்கிய விவோ வை19 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

Funtouch OS 9.1 உடன் களமிறங்கிய Vivo Z1x இன் சிறப்பம்சங்கள்!

TechNews Tamil

ஆகஸ்ட் 28-ல் ஓப்போ ரெனோ 2, ரெனோ 2Z மற்றும் ரெனோ 2F!

TechNews Tamil